பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

கலைவாணன்

யுடன் கபாடபுரத்திற் பொலிந்து மீண்டும் கடலால் விழுங்கப்பட்ட இடைச் சங்கமும் பின்பு,

இளந்திருமாறன், சிறுமேதாவியார், பெருங்குன்றுார் கிழார், பரணர், நக்கீரர் முதலிய 49 புலவர்களால் தோற்றுவிக்கப்பெற்று முடத்திரு மாறன் முதல் உக்கிரப் பெருவழுதி வரை 49 மன்னர்களால் 1950 ஆண்டுகள் பராமரிக்கப் பெற்று, நெடுந்தொகை 400, நற்றிணை 400, ஐங்குறுநூறு 100, பதிற்றுப்பத்து 150, பரிபாடல் 70, கூத்துவரி, பேரிசை, சிற்றிசை முதலிய பன்னூற்களைக் குவித்துப் பழம் புகழ் பெற்றது இத்தமிழ்ச் சங்கமே ஆகும். .

ஆஹா, தமிழணங்கின் அணிகலன்களாக விளங்கிய நூல்கள் எத்தனைக் காலம் கரையானுக்கு இரையாயின. எத்தனை மன்னர்கள் கவியரங்கேறினர். நாடகத் தமிழ் தான் எத்தனை நூல்களாகப் பாடப் பெற்றன. குண நூல், கூத்த நூல், சயந்தம், பரதம், முறுவல் முதலிய நாடக நூல்கள் எங்கே? அகத்தியம், குண்டலகேசி, வளையாபதி முதலிய அரிய தமிழ்ச் சுரங்கங்கள் எங்கே? எல்லாம் காலச் சூறாவளியிற் கரைந்து விட்டன.

எனினும் தமிழ்க்குமரி இன்றும் இளமையும் எழிலும் நிறைந்தவளாகவே திகழுகிறாள். உலகத்தின் முதன்மொழி தமிழேயாகும். தமிழ் சுமார் 11000 ஆண்டு களுக்கு முன்பே எண்ணெழுத்துகளுடன் பொலிந்தன. காலப் போக்கில் நமது கவனக்குறைவால் தமிழணங்கு சிறிது பொலிவிழந்து காண்பதைக் கண்டு நாம் நாண முடைய வேண்டும்.