பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைவாணன்

23


தமிழர்களே, விழிப்புற்றெழுங்கள். உலகெலாம் ஒப்பும் உயர்திருக்குறளை வள்ளுவர் நமக்கென வழங்கி யிருக்கிறார். இளங்கோவின் சிலம்புச் செல்வமிருக்கிறது. மற்றும் மணிமேகலை, சிந்தாமணி போன்ற எண்ணற்ற நூல்கள் பலவும் அழியாத செல்வங்களாக இருக்கின்றன. மற்றும்,

“முருகுபொருநாறு, பாணிரண்டு, முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி-மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்

பாலை கடாத்தொடும் பத்து”

என்னும் பத்துப் பாட்டின் இன்சுவையை என்றும் நாம் மறக்க முடியுமா? இவற்றுள் முருகன் பெருமையும், தமிழ் நாட்டின் வளமையும், தமிழ் மன்னர்களின் வீரமும், கொடையும், பேகன், பாரி, காரி, ஓரி, ஆய், அதிகமான் முதலிய வள்ளல்களின் வண்மைச்சிறப்பும் என்றென்றும் தமிழர் பெருமைக்கு எடுத்துக் காட்டாய் சித்திரிக்கப் பெற்றுள்ளன!

மற்றும், இன்றைக்கு நம்மிடையே தோன்றியுள்ள கவிச்சக்ரவர்த்தி கம்பரையும், தமிழ் மூதாட்டி ஒளவை யையும், கபிலர் போன்ற பேரிசைப் புலவர்களையும், நீங்கள் நன்கறிவீர்கள். இது தமிழுக்கு வரப்போகும் நல்ல முன்னேற்றத்தின் சாயை. இவர்களால் தமிழ் இலக்கியம் புதுமையெழில் பெறப் போகின்றது. மேலும் தமிழ்ச்சங்கப் பராமரிப்பில் பெரும் பங்குகொண்டு பணி யாற்றும் பாண்டிய மரபிற்றோன்றிய உங்கள் காவலர் சிறந்த கலையறிவும். கலை வளர்ச்சியில் அளவற்ற ஆர்வமும் கொண்டவர். அவர் ஆட்சியில் எங்கும் கலை