பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

கலைவாணன்


மணமும் அருள் ஒளியும் நிலவக் காண்கின்றேன், ஆகையால் இனி தமிழுக்கு நல்ல யோகமென்றே நினைக்கின்றேன். இத்தமிழ் மன்ற முன்னேற்றம் கருதி என்னாற் கூடும் பணியாற்ற என்றும் கடப்பாடுடையேன். அவரது ஆக்க வேலைகளிலெல்லாம், புலவர்களும், பொது மக்களாகிய நீங்களும் பங்கு கொண்டு தமிழ் நாடும் தமிழ் வேந்தும் சிறந்து, தமிழரின் கலைமணம் உலகுள்ள வரை வீசப் பாடுபடல் வேண்டும். தமிழரின் வீரம், அறம், அருள், அன்பு, புகழ், அனைத்தும் என்றும் இளங் கதிர் போல் ஒளியுடன் திகழ வேண்டுமென்பதே என் ஆசை. மற்றும் என்னை வரவேற்றுப் பெருமைப்படுத்திய மன்னருக்கும் புலவர்களுக்கும் பொதுமக்களாகிய உங்களுக்கும் என் வணக்கம். வாழ்க தமிழ்ச் சங்கம்! வாழிய செந்தமிழ்!

(வணங்கி அமருகிறார். மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரிக்கின்றனர்.)

பாண்டியன்:- அறிஞர் பெருமக்களே! அன்புள்ள குடிமக்களே! இத்தனை நேரம் புலவர் மணியின் இலக்கிய இன்பப் பொழிவில் நம்மையே மறந்திருந்தோம்.

“கேட்டாலு மின்பம் கிடைக்கும் கண்டீர் கொண்ட

கீர்த்தி யொடு பாட்டாலுயர்ந்த புகழேந்தி சொன்னபடி”

என்று ஒரு சமயம் படிக்காசுப் புலவரால் புகழப்பெற்ற அவரது புலமைத் திறனையும், இலக்கியப் பண்பையும் அவரது பெயரே நமக்கு அறிவுறுத்துகின்றது. அவரைக் காணவும், அவர் அரிய சொற்பொழிவைக் கேட்கவும் நேர்ந்த இன்னாள் நமக்கு ஒரு நன்னாளாகும். தமிழ்ப் பெரியாரின் ஆலோசனையின்படி யான் செய்யும் தமிழ்ப்