பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைவாணன்

27


பாண்டியன்:- என்ன! நீயா! நீயா பாடல் இயற்றுகிறாய்?

குமுதம்:- ஆம். இன்னும் பல பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள்!

பாண்டியன்:- உண்மையாகவா? பாடல்கள் இயற்ற நன்னூல் முதலிய இலக்கண நூல்களெல்லாம் கற்க வேண்டாமா?

குணவதி:- ஆம்; அவைகளையெல்லாம் புலவர்தான் பயிற்றுவிக்கிறார்.

பாண்டியன்:- குணவதி! இன்றே நான் உன்னைப் பெற்றதின் பயனைப் பெற்றேன்.

“செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும்

வானகமு மாற்ற லரிது”

என்ற வள்ளுவரின் வாக்கை மெய்ப்பிக்கும் உத்தமர் களில் நம்புகழேந்திப் புலவரும் ஒருவர். ஆஹா என்னே! அவரது கல்வியின் அடக்கம் நிறைந்த பேராற்றல்! இத் தனை குறுகிய காலத்துக்குள் எனக்கும் தெரியாமல் உனக்குக் கவிபாடும் திறமையை உண்டாக்கி வைத்த அவரின் போதனைத்திறன்தான் என்னே! ஆஹா புலவர் மணியின் நட்பைப் பெற்ற நானே பாக்கியவான். குணவதி நீ பாடல்களும் இயற்றுவாயென்பது எனக்கு இதுவரை தெரியாதே! எங்கே வீணையை மீட்டி அந்தப் பாடலைப் பாடு,. இல்லை...... அவள்...... உன் தோழி வீணையை மீட்டட்டும். நீ பரத பாவத்துடன் பாடு.

(தோழி குமுதம் வீணையை மீட்ட குணவதி பாடிக்கொண்டே ஆடுகிறாள்.)