பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

கலைவாணன்


இராகம் - கல்யாணி. தாளம் - ஆதி

எடுப்பு

இவனையோ மணமாலையிட எண்ணினை
ஈதடாத செயலே என் மகளே
(இ)

தொடுப்பு

புவனமெல்லாம் சுற்றிப் பிச்சையு மெடுப்பான்
புலையன் எச்சிலையுண்டும் உதைபட்டும் களிப்பான்
(இ)

முடிப்பு

சவமெரிந்திடும் சுடுகாட்டிடை வசிப்பான்
சாம்பலைப் பூசுவான் பாம்பணி புனைவான்
தவநிலை தவறாத யோகி போல் நடிப்பான்
தலையிடை இருபெண்கள் தரும் இன்பம் குடிப்பான்
(இ)

தொடர்முடிப்பு

அலியோடீனகுலத்து அணங்கையும் மணந் தான்
அடியவர்க்கருள் செய்யும் அறக்தொழில் மறந்தான்
புலியுரி புனைவதல்லா லெதிற் சிறந்தான்
புவியில் இவனுணக்கெவ் வகையிலும் பொருந்தான்
(இ)

(நாட்டியம் முடியும் தருணத்தில் புகழேந்தி வருகிறார்.)

புகழேந்தி:- அருமையான கற்பனை அற்புதமான நாட்டியம்!

(குணவதி நாணத்துடன் ஓடித் தந்தையிடம் நின்று கொள்ளுகிறாள்.)

பாண்டியன்:- வாருங்கள்! வாருங்கள்! புலவரே இவ்வாசனத்தில் அமருங்கள்,