பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைவாணன்

31

புகழேந்தி:- நான் உண்மையைத்தானே சொன்னேன். இதில் திகைப்பதற்கு என்ன இருக்கிறது. குணவதி? உன் பெருமை உனக்குத் தெரியாது. உன்னை அடையப் போகும் மணாளனே இவ்வுலகில் மிகவும் சிறந்த பாக்கியவானாவான்!

பாண்டியன்:- தங்கள் வாக்குப் பலித்து என் கனவும் நனவாக வேண்டும். இதுதான் என் ஆசை.

புகழேந்தி:- எல்லாம் மங்களமாக முடியும். சரி. நேரமாகி விட்டது. நான் ஆலயத்திற்குப் போக வேண்டும். போய் வரட்டுமா?

பாண்டியன்:- இன்று ஆலயத்திற்கு நானும் வருகிறேன். நாம் இருவருமே போகலாம். யாரங்கே!

(ஒரு சேவகன் வந்து வணங்குகிறான்.)

ரதம் சித்தமாகட்டும்.

சேவகன்:- உத்தரவு.

(வணங்கிச் செல்லுகிறான்)

பாண்டியன்:- குணவதி! புலவரின் சொற்படி கல்வியைக் கருத்தாய்ப் பயின்றுவா. புலவரின் ஆசியால் உனக்கு எல்லா நலங்களும் உண்டாகும்.

குணவதி:- (வணங்கி) அப்படியே ஆகட்டுமப்பா.

பாண்டியன்:- புலவரே! நாம் புறப்படலாமா?

புகழேந்தி:- ஆஹா போகலாம், குணவதி நான் போய் வரட்டுமா?

குணவதி:- (வணங்கி) போய் வாருங்கள்.

(பாண்டியனும் புலவரும் போகிறார்கள்.)

திரை.