பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&milâ–4

இடம் உறையூர் குலோத்துங்க சோழன் அரண்மனை.

காலம்-பகல்

(அரசவைப் புலவர் ஒட்டக்கூத்தரும், அமைச்சர் உதயணரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.)

கூத்தர். அரசர் சில நாட்களாக ஏதோ நிம்மதியற்றவராய்க்

காணப்படுகிறார். காரணமும் தெரியவில்லை.

உதயணர்:- தெரியாமலென்ன? எல்லாம் தெரியும். அவராக ஒன்றையும் சொல்லாமலிருக்கும் போது நாமென்ன செய்ய முடியும்?

கூத்தர்:- தந்தையார் விக்ரமசிங்கரின் மறைவுதான்் அவர்

வருத்தத்திற்குக் காரணமாயிருக்கலாமோ?

உதயனர்:- இருக்கலாம். ஆனாலும் அதைவிட முக்கிய

மான வேறொரு காரணமும் இருக்கலாமல்லவா?

கூத்தர்:- அப்படி வேறெந்தக் காரணமும் இருப்பதாகத் தெரியவில்லையே! உங்களுக்கு அதைப்பற்றி ஏதேனும் தெரியுமோ?

f

உதயணர்:- எனக்கு மட்டும் என்ன எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான்ே! தக்க பருவம் வாய்ந்த வாலிபர் களுக்குக் காலாகாலத்தில் நிகழக்கூடிய நினைவுகளே அவர் சோர்வுக்கும் நிம்மதிக் குறைவுக்கும் காரணமா யிருக்கலாம்.

கூத்தர் :- காதல் நினைவுகளா? உதயணரே! நீங்களென்ன

விளையாட்டாகச் சொல்லுகிறீர்கள்ா, அல்லது.