பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

33


உதயனர்:-விளையாட்டு ஒன்றுமில்லை. உண்மையாகத்

தான்் சொல்லுகிறேன்.

கூத்தர். அரசரின் வாழ்க்கையில் இதுவரை அத்தகைய

சந்தர்ப்பமே நிகழ்ந்ததில்லையே!

உதயணர்:- எத்தகைய சந்தர்ப்பம் நிகழ்ந்ததில்லை என்று

சொல்லுகிறீர்கள்?

கூத்தர். வேறு எந்த நாட்டு அரச குமாரிகளையும் பார்த்ததும் இல்லை; பழகியதும் இல்லையே என்றேன்.

உதயணர்:- அரசகுமாரிகளைப் பார்த்தும் பழகியும் இல்லா விட்டால் அரசகுமாரர்களுக்குக் காதலே உண்டாகா தென்று அர்த்தமா, என்ன?

கூத்தர்:- காணாத கன்னியின் மீதா காதல்?

உதயனர்:- கன்னியைத்தான்் காணாவிடிலும் நம்பத்

தகுந்தவர்களால் கன்னியின் எழில், குணம் முதலிய

பெருமைகளைக் கேட்டும் காதல் கொண்டிருக்கலா மல்லவா?

கூத்தர்: ஒஹோ! அப்படியானால் அவராக்வே தமக்கு - மண்மகளைத் தே ர் ந் .ெ த டு த் து விட்டர்ரென்று

சொல்லுங்கள்.

உதயணர்: ஆமாம்; பெரிய பகீரதப் பிரயத்தனத்திற்குப் பிறகுதான்் நானே இதை அவரிடமிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. -

கூத்தர்:- உம்! அப்படியா! அந்தப் பெண் யார்?

உதயணர்:- மதுரை கருணாகர பாண்டிய மன்னரின் புதல்வி குணவதியாம். அழகில் திருமகளையும் கல்வியில் 田一3 .