பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

கலைவாணன்


கலைமகளையும் நிகர்த்தவளாம். அவளையன்றி வேறு யாரையுமே மணப்பதில்லையென்று தீர்மானமாம்.

கூத்தர். இதைப்பற்றி உங்களிடம் நேரிலேயே சொன்னாரா?

உதயனர்:. ஆம்; நேற்றுதான்் சொன்னார்.

(அரசர் குலோத்துங்கன் வருகிறார்.)

அதோ, அரசரே! வருகிறார்.

உதயணர்:- அரசே வணக்கம்.

கூத்தர். சோழவேந்தருக்கு எனது வாழ்த்துக்கள்! குலோத்து: வணக்கம்.

(எல்லோரும் அமருகிறார்கள்.)

நீங்கள் வந்து அதிக நேரமாகி விட்டதோ?

உதயணர்:- இல்லை. நாங்கள் இப்பொழுதுதான்் வந்தோம், தாங்கள் சீக்கிரம் வந்து விடுவீர்கள் என்று எதிர்பார்த்தே நாங்கள் வந்ததைத் தெரியப்படுத்த ஏற்பாடு செய்ய வில்லை.

குலோத்து:- நானும் இத்தனை நாழிகைவரை இங்கேதான் இருந்தேன். மனம் நிம்மதியில்லை; பொழுதும் போக வில்லை; உங்களையும் காணவில்லை; பிறகுதான்் அப்படி கொஞ்சம் பூங்காவைச் சுற்றிவிட்டு வருகிறேன்.

கூத்தர்:- உங்கள் மன நிம்மதிக்கு மருந்து கொடுக்கத்தான்் உதயணர் பூரண பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறதே!

குலோத்து. புலவரே! தாங்கள் சொல்வதொன்றும் எனக்கு

விளங்கவில்லையே!