பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

35


கூத்தர்:- விளங்கவில்லையா! நேற்று உதயனரிடம் என்ன

சொன்னீர்கள்?

குலோத்து:- அதை உங்களிடமும் சொல்லி விட்டாரா?

கூத்தர்:- அரசே! இது முன்னரே தங்கள் தந்தையாரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மணமகளே ஆகும். அவர்இருக்கும் போதே தங்கள் திருமணத்தை முடிக்க முடியாமற் போனது துர்ப்பாக்கியமே. என்றாலும், அவர் விருப்பப்படி எப்படியும் தங்களுக்குப்பாண்டிய மன்னரின் புதல்வியை மணம் புரிவிக்க வேண்டுமென்பது தான்் எங்கள் எண்ணம். ஆகையால் நாளையே உதயணரை அனுப்பினால்...

உதயணர் இல்லை. தாங்களால் தான்் இக்காரியத்தை முடிக்கமுடியும் அரசே! புலவரையே அனுப்புங்கள். அவர் நிச்சயம் வெற்றியுடன் திரும்புவார்.

குலோத்து:- ஆம்; இது உங்களால்தான்் முடியவேண்டும். நீங்கள் தான்் போகவேண்டும். காரியத்தையும் முடித்துக் கொண்டு வரவேண்டும்.

கூத்தர்:- அப்படியே ஆகட்டும். நானும் மதுர்ைக்குப் போக வேண்டுமென்றுதான்் இருந்தேன். இத்துடன் அந்த வேலையும் முடியும். குலோத்து:- அதென்ன வேலையென்பதை நாங்கள் அறிந்து

கொள்ளலாமோ! - கூத்தர்:- இதை உலகமே அறியவேண்டியது தான்ே! அங்கே புகழேந்தி என்றொரு புலவர் இருக்கின்றாரே, அவரை உங்களுக்குத் தெரியுமா? குலோத்து:- ஆம்; அவரைப்பற்றி மூதாட்டி , ஒளவையார் - கூட ஒரு சமயம் புகழ்ந்து பேசக் கேட்டிருக்கிறேன்.