பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

கலைவாணன்


கூத்தர்:- உம்; அந்த கிழம் யாரைத்தான்் புகழ்ந்து பேச வில்லை? இருக்கட்டும். இம்முறை மதுரையில் அவர் பெருமை எவ்வளவென்பதை வெட்டவெளிச்சமாக்கா மலா வரப்போகிறேன்? புகழேந்தியாம். பெயரைப் பார்!

குலோத்து:- அதையும் பார்க்க வேண்டியதுதான்். ஆனால்! அங்கு தாங்கள் போன வேலையை மறந்து கலைப் போரில் இறங்கிவிட்டால்! பிறகு...

கூத்தர்:- இல்லை இல்லை. எனக்குத் தெரியாதா என்ன?

எப்படியும் உங்களுக்குக் காரியம்தான்ே?......

குலோத்து:- ஆமாம். எப்படியும் காரியத்தை வெற்றியுடன்

முடித்தால் சரிதான்்.

(அமைச்சரிடம்) அமைச்சரே! நாளைப் புலவர் மதுரை புறப்பட எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுங்கள்.

உதயணர்:- உத்தரவு! குலோத்து:- நாளை மதுரை புறப்படும் முன், மீண்டும்

தங்களைச் சந்திக்கின்றேன்.

(அரசர் செல்லுகிறார்.) (திரை)