பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம்:-பாண்டியன் கொலுமண்டபம். காலம்:-மாலை.

(சங்கு, தாரை, முரசு முதலிய இசை முழங்க கருணாகரப் பாண்டியன் கொலுமண்டபத்தில் வந்தமருகிறார். புகழேந்தி, அமைச்சர், முதலிய யாவரும் வணங்க தான்ும் வணங்கி அமரும்படி கையமர்த்தித்தான்ும் அமருகிறார். நாட்டிய மாதர்கள் வந்து நடனமாடுகின்றனர். காவலன் வருகிறான்.)

காவலன்:- அரசே! உறையூர் குலோத்துங்கச் சோழ மன்னரின் அரசவைப் புலவர் ஒட்டக்கூத்தர் தங்கள் சேவை காண வந்திருக்கிறார்.

பாண்டியன்:- அப்படியா அமைச்சரே, அவரைத் தக்க

மரியாதையுடன் அழைத்து வாருங்கள்.

அமைச்ச்ர்:- உத்தரவு.

(Jಣುನಿಕ செல்லுகிறார். கூத்தர் வருகிறார்.)

கூத்தர்:- பாண்டிப்பதியே, வாழ்க! எல்லோரும். வரவேண்டும்! வரவேண்டும்!

(அரசர்முதல் யாவரும் எழுந்து வணங்குகின்றனர்.) புகழேந்தி:- தங்கள் வரவு நல்வரவாகுக! பாண்டியன்:- புலவர் பெரும! இவ்வாசனத்தில் அமருங்கள்,

(கூத்தர் ஆசனத்தில் அமருகிறார்.)