பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

39


பாண்டியன்:- புலவரே! என்ன யோசனை? பாண்டியன் சொன்ன சொல் தவற மாட்டான். தயக்கமின்றிச்

சொல்லுங்கள்.

கூத்தர். எங்கள் அரசர் குலோத்துங்கச் சோழ மன்னருக்குத் தங்கள் புதல்வி குணவதியைத் திருமணம் செய்விக்க வேண்டுமென்பது எங்கள் விருப்பம். இதற்குத் தங்கள் விருப்பத்தையும் சம்மதத்தையும் பெற்று வரவே அரசர் எம்மை அனுப்பியுள்ளார். தங்கள் அபிப்பிராயம் என்ன வென்பதை........... ! -

பாண்டியன்: புலவரே மிக்க மகிழ்ச்சி. ஆயினும், இதில் என் அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள்ளுமுன் மணமகளின் அபிப்பிராயத்தையும், மணமகளது தாயின் விருப்பத்தையும் தெரிந்துகொள்ள வேண்டாமா?

கூத்தர்: அரசே! இதற்கெல்லாம் பெண்களின் அபிப்பிராயங் களைக் கேட்டே நடந்து கொள்ள வேண்டுமென்றால் முடியுமா? மேலும் வெளியுலகம் இன்னதென்றறியாது கூண்டுக் கிளிபோல் அந்தப்புரத்திலேயே கட்டுண்டு கிடக்கும் அரிவையர்களுக்கு, சோழ நாட்டின் வளம், சோழனின் வீரம், அவன் ஆட்சித்திறம், மற்றைய பெருமைகளனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் ஏது?

பாண்டியன்:- புலவரே! பெண்களைக் கூண்டுக்கிளிபோல் அடைத்து வைத்து வெளியுலகம் தெரியாத விலங்கினங் களைப் போல் நடத்துவது எங்கள் நாட்டு வழக்கமல்ல. பாண்டிய நாட்டுப் பெண்மணிகள் சமயம் நேரும்போது வாளும் வில்லும் எடுத்து வீரப் போரியற்றி வல்லரசு களையும் வெல்லும் திறம்படைத்த வீராங்கன்ைகள் என்பது நினைவில் இருக்கட்டும். அது மட்டுமல்ல!