பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

கலைவாணன்


கலைத்திறனிலும் பொது உலக ஆராய்ச்சி அறிவிலும் இவர்கள் மற்றைய நாட்டு மங்கையர்களுக்கு இளைத் தவர்கள் இல்லையென்பதும் நினைவில் இருக்கட்டும்.

கூத்தர். மிகவும் நல்லதாயிற்று. அத்தகைய அணங்கை அடையவேண்டு மென்பதுதான்் எங்கள் அரசனின் ஆசை!

பாண்டியன்:- ஆசை மட்டும் இருந்தால் போதுமா? உம் அரசர் எம் புதல்வியை மணக்கத் தகுந்த யோக்கியதை உள்ளவரா என்பது சிந்திக்கத் தகுந்த முக்கிய விஷயமல்லவா?

கூத்தர்:- சோழ நாட்டின் பெருமையையும் சோழனின்

புகழையும் சொல்லியா தெரிந்து கொள்ள வேண்டும்?

(பாட்டு) கோரத்துக் கொப்போ கனவட்டம் அம்மானே!

கூறுவதும் காவிரிக்கு வையையோ அம்மானே! ஆருக்கு வேம்பு நிகராமோ அம்மானே!

ஆதித்தனுக்குகிகர் அம்புலியோ அம்மானே! வீரர்க்குள் வீரனொரு மீனவனோ அம்மானே!

வெற்றிப் புலிக்கொடிக்கு மீனமோ அம்மானே! ஊருக்கு உறந்தை நிகர் கொற்கையோ அம்மானே!

ஒக்குமோ சோனாட்டுக்குப் பாண்டிய நாடம்மானே!

பாண்டியன்:- (சீற்றத்துடன்) கூத்தரே! நன்று நன்று: உமது கூற்று. பேச்சிற் பெருமையடையும் பிள்ளை களின் பிதற்றலைப் போல் இருக்கிறது தங்களின் தற்புகழ்ச்சி. என் வினாவிற்கு இதுதான்் விடையோ?

புகழேந்தி:- அரசே! சினம் வேண்டாம். சற்று பொறுங்கள். தங்கள் வினாவிற்கு அவர் விடையளிக்கத் தவறிவிட்டா