பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

41


ரென்பது உண்மையே என்றாலும் அதே தவறை நாமும் செய்யவேண்டாம். அவர் வினாவுக்கு நான் பதிலளிக் கிறேன்.

(கூத்தரை நோக்கிப் பாடுகிறார்.)

(பாட்டு) ஒரு முனிவன் நேரிலோ உரை தெளித்த தம்மானே!

ஒப்பரிய திருவிளையாட் டுறந்தையிலோ அம்மானே! திருநெடுமால் அவதாரம் சிறு புலியோ அம்மானே!

சிவன் முடியில் ஏறுவதும் செங்கதிரோ அம்மானே! கரைஎதிர் ஏடேறியதும் காவிரியோ அம்மானே!

கடிபகைக்குத் தாதகிற் கண்ணியோ அம்மானே! பரவையணிந்ததும் சோழன் பதங்தனையோ அம்மானே!

பாண்டியனார் பராக்கிரமம் பகர்வெளிதோ அம்மானே

பாண்டியன்:- கூத்தரே! என் கேள்விக்குப் பதில் தாங்கள் பாடிய பாட்டல்ல. அவை உமது கவிபாடுந் திறமையைக் காட்டும் நோக்கத்துடன் உளறிக் கொட்டிய சொற் குப்பைகளே ஆகும். போகட்டும். இப்போதாவது எமது புலவர் மணியின் கேள்விக்குத் தக்க பதிலளியும். இல்லையேல் எல்லோர் முன்னிலையிலும் இச்சபையில் உமது தோல்வியைப் பகிரங்கமாய் ஒப்புக்கொள்ளும்.

புகழேந்தி:- அரசே! பெண் கேட்கும் தூதுவராக வந்த இவரிடத்தில் நாம் கல்விப்போட்டி யிடுவதோ அல்லது அவர் புலமையை அளவிடுவதோ நமக்கழகல்ல. மேலும் புலவர்களென்று சொல்லிக் கொள்ளும் பெரும் பாலோரிடம் இத்தகைய அகங்கார குணம் இருப்பது இயற்கை. ஆகையால் நாம் இப்போது சிந்திக்க வேண்டியது இவரைப் பற்றியன்று. விக்ரம சோழ மன்னர் மகா நீதிமான், சிறந்த வீரர். ஏழைகளின்