பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

கலைவாணன்


தோழர், பெரியோர்களையும், புலவர்களையும், மதித்து நடத்தும் உத்தமர். அவரது புதல்வராகிய குலோத்துங்க மன்னரும் எவ்வகையிலும் தந்தைக்குப் புறம்பான்வர் அன்றென்பதே கற்றறிந்த யாவர் முடிவும். ஆகையால் கல்வியறிவும் கலைவளர்ச்சியில் மிக்க ஆர்வமும் கொண்ட நமது குணவதிக்கு குலோத்துங்கன் எவ்வகை யிலும் பொருத்தமுடைய நாயகன் என்பதே என்கருத்து. ஆகையால் புலவரைச் சிலநாள் நமது கெளரவ விருந்தின ராய் வைத்திருந்து அரசி, இளவரசி முதலியோரின் அபிப்பிராயத்தையும் தெரிந்து தக்க முறையில் சுபச் செய்தியுடன் அவரை வழியனுப்புவதே நலம்.

மதிவாணர்:. ஆம்; அரசே! எனக்கும் புலவர் சொல்வதுதான்்

நலமென்று தோன்றுகிறது. பாண்டியன்:- புலவர் சொல்லுக்குப் புறம்பாக நான் என்றும் நடந்ததில்லை. என்றாலும்...! இவ்விஷயத்தில் மட்டும் இச்சபையிலுள்ளோர்களின் அபிப்ராயத்தை ஒட்டியே தீர்மானிக்க நினைக்கிறேன்.

எல்லோரும்:- புலவர் சொல்வதே சரி. புலவர் சொல்வதே சரி. - பாண்டியன்:- புலவரே இன்றைய நிகழ்ச்சியில் வெற்றி

தங்களுக்குத்தான்். - புகழேந்தி: அரசே! வெற்றி எனக்குமல்ல; தங்களுக்குமல்ல.

உண்மையில் வெற்றியடைந்தவர் கூத்தர்தான்். மதிவாணர்:- அவ்வெற்றிக்கும் காரணம் நீங்கள்தான்்.

புகழேந்தி:- வெற்றி யாருடையதாயினும் சரி! வெற்றியின் பயனை அடையப் போகிறவர்கள் குலோத்துங்கனும் குணவதியுமாகத்தான்் இருக்க வேண்டும்.