பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

43


மதிவாணர்:- ஏன் அந்த மகிழ்ச்சியில் நம் அனைவருக்கும்

பங்குண்டல்லவா?

புகழேந்தி:- கூத்தரே, இன்றைய நிகழ்ச்சியை இன்றோடு மறந்து விடுவோம். இன்று நீங்கள் எங்கள் விருந்தினர்; நாளை உறவினர். நிச்சயம் சுபச்செய்தியுடன் சோழ நாடு போகலாம். சரிதான்ே?

கூத்தர்:- சரிதான்். பாண்டியன்:- அமைச்சரே! கூத்தர் நமது அரசாங்க விருந் தினர். அவருக்கு வேண்டிய செளகரியங்கள் யாவும் செய்து கொடுக்கத் தக்க ஏற்பாடுகள் செய்யுங்கள்.

மதிவாணர்: அப்படியே ஆகட்டும். அரசே!

பாண்டியன்:- (புகழேந்தியைப் பார்த்து) புலவரே, வாருங்

கள் அந்தப்புரம் செல்வோம்.

(புலவரும் அரசரும் செல்லுகிறார்கள்.) (திரை)