பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம்:-சோழநாட்டின் ஒரு முக்கிய வீதி. காலம்:-பகல்.

(நகரெங்கும் அலங்கரிக்கப் பெற்றிருக்கிறது. குடி மக்கள் குதுகலத்துடன் கூட்டம் கூட்டமாய்ச் செல்லுகின்றனர். விஷயமறியாத சில வேற்றுரர் வாசிகள் விழிக்கின்றனர்.)

ஒருவன்:- அண்ணே! இங்கே என்னா விஷேசம்? எங்கே பார்த் தாலும் தோரணங்களும் வாழைமரங்களும் கட்டி யிருக்கு ஆனையுங் குதிரையும் ரதங்களும் சனங்களும் கூட்டங்கூட்டமாகக் கும்மாளம் போட்டுக்கிட்டு போவுது. விசயம் என்னான்னு ஒன்னும் புரியலையே!

மற்றவன்:- நாங்களும் ஒன்னோட வந்தவங்கதான்ே! ஒனக்குத் தெரியாத விசயம் எங்களுக்கு மட்டும் எப்படித் தெரியும்?

3-வது ஆள்:- யாரையாச்சுங் கேட்டுத் தெரிஞ்சுக்கலா முன்னாலும் மனுசன் யாரும் நின்னுகூட பதில் சொல்ல மாட்டாங்க போலேருக்கேi

மற்றவன்:- என்னாண்ணே! இதுக்கெல்லாம் ரோசனெ

பண்ணினா முடியுமா? சும்மாக் கேளண்ணே. ஒருவன்:- ஏன்? நீ தாங் கேளேன்.

மற்றவன்:- உம், கேக்கட்டுமா? உம். இதோ கேக்கிறேன்

பாரு!

3-வது ஆள்:- ஆமா! நீங்க கேக்கறத்துக் குள்ளே, கெளுக்கு

வெளுத்துப் போவும் போங்க, அட இப்புடிப் போண்ணே! மகா தைரியக்காரப் புலிங்கதான்்.