பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

கலைவாணன்


௸ ஆள் :- சரி சரி, சொல்றேங் கேள். நாளைக்கி இந்த ஊரு மகாராஜாவுக்குக் கண்ணாலம். அதுக்காகத்தான் இந்த அலங்காரங்களெல்லாம். அரண்மனையிலே யார் போனாலும் மூக்கைப் பிடிக்க சாப்பாடும், பணமுங் காசும், துணியும் மணியும், நகையும் நட்டுமா ஏராளமா வாரி வாரி இரைக்கிறாங்க. தெரிஞ்சுதா விஷயம், உம். நீங்க வந்தாலும் கிடைக்கும். வாங்க வாங்க; சீக்கிரம் போங்க!

(போகிறான்)

3வது ஆள்:- கேட்டிகளா! நமக்கு இன்னெக்கு நல்ல வேட்டைதான்.

மற்றவன்:- ஆமாமா; இன்னெக்கி நம்ம நரி மொகத்திலே முழிச்சிருப்போம் போலேருக்கு. வாங்க வாங்க; சீக்கிரம் போவோம்.

3வது ஆள்:. (திரும்பிப் பார்த்து ௸ ஆளைக் காணாது திகைத்து) அடடே, அந்த ஆளை விட்டுட்டோமே! (சுற்றிப்) பார்த்து அதோ போராரு. உம் வாங்க; சீக்கிரம் வாங்க. அந்த ஆள்கூடவே அரமனைக்குப் போயிடலாம். அண்ணே! அண்ணே! நில்லுண்ணே; நாங்களும் வர்றோம். அண்ணே ஒன்னெத்தாண்ணே (சத்தம் போட்டுக் கொண்டே ஓடுகிறார்கள்.)

[திரை]