பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

கலைவாணன்

குணவதி முதலியோர் பிராயணத்துக்குத் தயாராகி விட்டார்களா வென்று பார்த்துவா!

ஏவலாள்:- உத்தரவு,

(போகிறான்.)

பாண்டியன்:- அமைச்சரே! குறிப்பிட்ட நேரம் நெருங்கி விட்டது. நீங்கள் முன்னதாகப் போய் யானை, குதிரை, ஒட்டை, ரதம், சிவிங்கிகள் முதலியவைகளை அணி வகுத்துத் திட்டம் செய்யுங்கள். இதோ நானும் புலவரும், குணவதி முதலிய எல்லோரையும் அழைத்து வருகிறோம்.

மதிவாணர்:- அப்படியே ஆகட்டும்.

(போகிறார்.)

(குணவதியின் தோழி குமுதம் வருகிறாள்.)

பாண்டியன்:- என்ன குமுதா! அங்கே எல்லோரும் புறப்படத் தயார்தானே?

குமுதா:- ஆம்; எல்லாம் தயார்தான்....ஆனால்!......

பாண்டியன்:- ஆனாலென்ன குமுதா?

குமுதா:- இன்று காலையிலிருந்தே மகாராணியும் இளவரசியும் அழுதுகொண்டே இருக்கிறார்கள். நாங்கள் எவ்வளவு தேற்றியும்......

பாண்டியன்:- என்ன அழுகிறார்களா! ஏன் அழவேண்டும்?... ...உம்!....சரி...நீ போய் அவர்களை இங்கே அழைத்துவா.

குமுதா:- உத்தரவு.

(குமுதம் போகிறாள்.)

பாண்டியன்:- பேதைகள் இந்தப் பெண்களின் குணமே இப்படித்தான். எப்போது துக்கப்படவேண்டும்; எப்போது மகிழ்ச்சியடைய வேண்டும் என்ற வித்தியாசம் கூடத் தெரிவதில்லை.