பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைவாணன்

49

புகழேந்தி:- ஆம்; இது இயற்கைதான். ஸ்வர்க்கபோகத்தில் திகழும் மணாளனை அடையப் பெற்றாலும் கூட, பெற்றோரை விட்டு நீங்கும்போது பெண்கள் வருந்தாமல் இருப்பதில்லை. காரணம், பெண்கள் அன்பின் அவதாரங்கள் அல்லவா (கண்ணீருடன் குணவதி குமுதத்தின் கையைப் பற்றிய படி வருகிறாள். ராணி புனிதவதியும் அழுதுகொண்டே வருகிறாள்.)

பாண்டியன்:- (அன்புடன் குணவதியின் சிரத்தை வருடி) குணவதி! இது என்ன பேதமை! கலையறிவு மிக்க நீயா இப்படிக் கவலை கொள்வது? பெண்கள் என்றைக்காவது ஒரு நாளைக்குப் பெற்றோர்களைப் பிரிந்து கணவன் வீடு செல்ல வேண்டியவர்கள்தானே? இதற்காகவா இப்படி சிறுகுழந்தைபோல் அழுவது?...... அழாதே அம்மா! குணவதி அழாதே.

குணவதி:- இளமை முதல் பிரிந்தறியாத நான் உங்கள் எல்லோரையும் பிரிந்து எப்படித் தனிமையிலிருப்பேன் அப்பா?

பாண்டியன்:- குணவதி! நீ தனிமையிற் போக வேண்டாம். உனக்கு இஷ்டப்பட்ட தோழிகளையும், பணியாளர்களையும் அழைத்துக் கொள்ளலாம்.

புகழேந்தி:- (ராணியை நோக்கி) மகாராணி, நீங்களே இப்படி துக்கப்பட்டால் குணவதியைத் தேற்றுவதுதான் யார்?

புனிதவதி:- ஒருகணமும் பிரிந்தறியாத என் இன்பக்கிளியை நான் எப்படி ஸ்வாமி பிரிந்திருப்பேன்?

(மகாராணியும் குணவதியும் அழுவதைக் கண்டு மன்னனும் கண்கலங்குகிறார்.)

க—4