பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

கலைவாணன்

பாண்டியன்:- கண்மணி, வீணே வருந்தாதே! உனக்கு வாய்த்திருக்கும் மணாளர் மகா உத்தமர்! உனக்கு ஒரு குறையும் நேராது. மனதைத் தேற்றிக் கொள். அதோ பார்! நீ வருந்துவதைக் கண்டு உன் தாயும் வருந்துகிறாள்.

புகழேந்தி:- குணவதி பெண்களுக்கு கணவரிலும் சிறந்த துணைவருண்டோ? உலகில் இளமையிற் பெற்றோர் ஆதரவிலும், கருத்தறிந்த பின் கணவர் ஆதரவிலும் முதுமையில் மக்களின் ஆதரவிலும் இருக்க வேண்டியதுதானே பெண்களின் கடமை! மேலும், இல்வாழ்க்கை யென்னும் இன்ப வாழ்வைத் தொடங்கப் போகும் நீ முதன் முதலில் புறப்படும் போது இப்படி அழலாமா?

குணவதி:- நீங்களெல்லாம் எப்பொழுதப்பா வருவீர்கள்?

பாண்டியன்:- நீ எப்போது விரும்பினாலும் வருகிறோம் சோழ நாடு அவ்வளவு தூரமல்லவே! நீ விரும்பும்போது ஒரு தூதுவனை அனுப்பினால் மறுநாளே அங்கு வந்து சேருவோம்! கண்ணே! இதோ உன் உன் உயிர்த் தோழி இருக்கிறாள். இன்னும் உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள்; தருகிறேன்.

குணவதி:- உண்மையில் நான் எது கேட்டாலும் தருவீர்களல்லவா, அப்பா?

பாண்டியன்:- கண்மணி! நீ இந்த நாட்டின் இளவரசியாயிற்றே! நீ கேட்பதைக் கொடுக்காமல் வேறு யாருக்குக் கொடுக்கப் போகிறேன்? குணவதி!

குணவதி:- அப்படியானால் புலவர் பெருமானையும் என்னுடன் அழைத்துக் கொண்டு போக்ட்டுமா, அப்பா?