பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைவாணன்

51

பாண்டியன்:- கண்மணி! நீயும் புலவரும் எனக்கு இரு கண்களுக்கு நிகரல்லவா! நீங்கள் இருவரும் ஏக காலத்தில் என்னை விட்டுப் பிரிந்துவிட்டால்!...என் வாழ்க்கை இன்பமே நசிந்து விட்டதைப் போலல்லவா இருக்கும்?

குணவதி:- என் உயிருக்கும் உள்ளத்துக்கும் இன்பமளிப்பது கலையமுதமல்லவா, அப்பா? புலவரைப் பிரிந்தால் என் இதயத்தில் எரியும் இலக்கிய தீபம் ஒளி குன்றி விடாதா?

பாண்டியன்:- புலவரே! இதென்ன பிடிவாத குணம்? பார்த்தீர்களா! தங்களையும் பிரிந்து நான் எப்படித் தனித்திருக்க முடியும்?

புகழேந்தி:- அரசே! இருதலைக் கொள்ளியிடை எறும்பென இருக்கின்றது என் நிலை, ரஸிக சிகாமணியாகிய தாங்களோ அன்புத் தெய்வம். குணவதியோ எனது இலக்கியச் சுடர். இந்நிலையில் நான் யாரைத் தொடர்வது? யாரைத் துறப்பதென்பது தெரியாமல் தவிக்கிறேன். ஆகையால் தங்கள் ஆணையெதுவோ அதன்படி நடப்பதே என்கடன்.

பாண்டியன்:- (சற்றுநேரம் மெளனமாகச் சிந்தனையிலாழ்ந்து, பின் தனக்குள்) ஆம்....! இலக்கியமின்றேல் புலமையில்லை, புலமையின்றேல் இலக்கியமில்லை. இவை இரண்டும் ஒன்று சேர்ந்த உள்ளத்திலிருந்து தானே உலகம் வியப்படையும் உயர்ந்த கற்பனா சிருஷ்டியாகிய கவிதைகளும் தோன்றுகின்றன! (சற்று மெளனம்) ஆம்; குணவதியிடத்தில் என்னைக் காணலாம். ஆனால்!...என்னிடத்தில் குணவதியைக் காண முடியாதல்லவா? (மீண்டும் சற்று மெளனம்) குணவதி! உன் விருப்பப்படியே ஆகட்டும். ஆனால், என்னைப் பித்த-