பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

கலைவாணன்

னாக்கிவிடாதே! புலவரின் நிரந்தரப் பிரிவை என்னால் சகிக்க முடியா தென்பதையும் நீ மறந்துவிடாதே.

(எல்லோரும் மெளனத்திலிருக்கிறார்கள். குலோத்துங்கனும் மதிவாணரும் வருகிறார்கள்.)

குலோத்:- அரசே வணக்கம்:

(யாவரும் தூக்கத்திலிருந்து விழித்தவர்களைப் போல் திடுக்கிட்டு உணர்வு வரப்பெறுகின்றனர். குலோத்துங்கனைக் கண்ட குணவதி மான் குட்டியைப் போல் நாணத்தோடு ஓடி மறைகிறாள். மகாராணியும் சென்று விடுகிறாள்.)

பாண்டியன்:- வாருங்கள்! வாருங்கள் உம், அதிகத் தாமதமாகி விட்டதோ?

குலோத்:- இல்லை; தருணம்தான்.

பாண்டியன்:- இதோ புறப்பட வேண்டியதுதான். உம். குமுதம்! நீ சீக்கிரம் போய் குணவதியைப் பிரயாணத்திற்குச் சித்தப்படுத்தி இங்கு அழைத்துவா.

குமுதம்:- உத்தரவு.

(குமுதம் போகிறாள்.)

பாண்டியன்:- மதிவாணரே, மற்ற ஏற்பாடுகள் எல்லாம் முடிந்து விட்டனவல்லவா?

மதிவாணர்:- ஆம். எல்லா ஏற்பாடுகளும் முடிந்தன. புறப்பட வேண்டியதுதான்.

(குமுதம் குணவதியை அழைத்து வருகிறாள். மகாராணியும் வருகிறாள்.)

புகழேந்தி:- குணவதி! அன்னை, தந்தை, மற்றுமுள்ள பெரியோர்கள் எல்லோரையும் வணங்கிக்கொள்.