பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்சி-9.

இடம்:- மதுரைமா நகரில் ஒரு முக்கிய வீதி, காலம் - மாலை. (மீனக் கொடிகளும் புலிக் கொடிகளும் தாங்கிய வீரர்களும் வாள், வேல் முதலிய ஆயுதங்கள் தாங்கிய குதிரை வீரர்களும் அணிவகுத்துச் செல்லுகின்றனர். பேரிகை, சங்கு, தாரை முதலிய வாத்தியங்கள் முழங்க குலோத்துங்கன், குணவதி, பாண்டியன், புகழேந்தி முதலிய யாவரும் பல்லக்குகளில் அமர்ந்து செல்லுகின்றனர். எங்கும் நிறைந்து நின்று காட்சியைக் காணும் மக்கள் மகிழ்ச்சிப் பெருக்கால் ‘மன்னர் நீடுழி வாழ்க! இளவரசி வாழ்க! சோழ மன்னர் வாழ்க!’ என்று பலவாறு ஆரவாரிக்கின்றனர். மன்னரும் இளவரசியும் புன்முறுவலோடு மக்களுக்கு விலையுயர்ந்த பொருள்களையும் பொற்காசுகளையும் வழியனைத்தும் வாரியிறைத்துக் கொண்டே செல்லுகின்றனர்.)

(திரை)

காட்சி-10

இடம்–மலர் வனம்

காலம்–மாலை

(குணவதி குமுதத்துடன் உலாவுகிறாள்)

குணவதி:- ஆஹா! என்ன அற்புதம்! எவ்வளவு அழகான காட்சியடீ குமுதம், அதோ பார்! அந்த மாலைக் கதிரவனின் ஆனந்தமயக் காட்சியைக் காணக் காண எவ்வளவு குதுகலம் உண்டாகின்றது; பார்த்தாயா?

குமுதம்:- குணவதி! உன்னுடன் எப்போதும் இந்தத் தொல்லைதான். மலர்வனத்துக்கு வந்தால் கொஞ்ச