பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைவாணன்

59

(குமுதம் போகிறாள். குலோத்துங்கன் வருகிறான். குலோத்துங்கனைப் பார்த்தும் பாராதவளைப் போலிருக்கிறாள் குணவதி.)

குலோத்:- குணவதி! நீ தனியாகவா இங்கு வந்தாய்? குமுதம் வரவில்லையா உன்னுடன்?

குணவதி:- வந்தாள்.

குலோத்:- ஆனால், எங்கே?

குணவதி:- எங்காவது போயிருப்பாள்.

குலோத்:- உனக்குத் தெரியாமலா? குணவதி உன்முகம் ஏன் வாடியிருக்கிறது? (முகத்தைக் கையால் திருப்பி) ஹா! அழுதுகூட இருக்கிறாயே! காரணம்?

குணவதி:- காரணம்; சோழநாட்டின் மகாராணியானதுதான்

குலோத்:- குணவதி! நீ சொல்வதொன்றும்......

குணவதி:- ஆமாம்; கூத்தரின் கைப்பாவையாக இருக்கும் தங்களுக்கு யார் எதைச் சொன்னாலும் புரியாதுதான்.

குலோத்:- குணவதி! இது அவசியமில்லாத வார்த்தை. மேலும் கூத்தரை என் முன் யாரும் அவமதிக்கச் சகியேன். கூத்தர் என் கலைக்கண்களைத் திறந்தவர். வாழ்க்கைப்பாதையை வகுத்துக் காட்டியவர். அவர் விருப்பத்திற்கு மாறாக இந்நாட்டில் எதுவும் நடவாது. அதுதான் அவர் அன்புக்கு நான் செய்யும் கைம்மாறு.

குணவதி:- அவர் விருப்பம் அக்கிரமத்தையும் அநீதியையும் விளைவிப்பதாயின்?

குலோத்:- அவர் முடிவு எதுவும் நியாயமானதாயிருக்கும் என்பதுதான் என் நம்பிக்கை.

குணவதி:- என்ன நியாயம்? கற்றறிந்த புலவர்களையும் கவிஞர்களையும் அவமதித்துச் சிறையில் வைத்துச்