பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைவாணன்

63

பேசிவிட்டான். மேலும் அவனது பாண்டிய நாட்டுத் தோழனாம் ஒரு கோமாளி. பெயர் விகடகவியாம். அவன் வேறு எவ்வளவு அவமதிப்பாகப் பேசிவிட்டான் தெரியுமா?

குலோத்:- அமைச்சரே! கேட்டீர்களா விஷயத்தை. புகழேந்தியின் விஷமம் அளவுக்கு மிஞ்சிவிட்டது. உடனே தக்க பாடம் கற்பிக்கவேண்டும்.

கூத்தர்:- முன்பே அவன் பாண்டியனின் அவையில் உங்களையும் என்னையும் அவமதித்த குற்றத்திற்குத் தக்க தண்டனயைளியாது. மன்னித்துவிட்டதாலல்லவா இன்று இப்படிப் பேசுகிறான். எந்தப் புலவர்களுக்காக அவன் பரிந்து பேசுகிறானோ அந்தப் புலவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலேயே அவனையும் போட்டு வதைத்தால் அவன் இப்படியெல்லாம் பேசுவானா?

குலோத்:- ஆம்; தாங்கள் சொல்வதுதான் சரி; உடனே செல்லுங்கள். புகழேந்தி எங்கிருந்தாலும் தேடிப் பிடித்துச் சிறையிடச் செய்யுங்கள். அவருடன் இருக்கும் அந்தக் கோமாளியையும் சிறையிடுங்கள். அமைச்சரே! இதை முதலில் செய்தபிறகுதான் வேறு வேலை பார்க்க வேண்டும்.

உதயண்ர்:- அரசே! எதற்கும் புகழேந்திப் புலவரை நேரில் அழைத்துத் தாங்களே விசாரித்துப் பார்த்து......

குலோத்:- உதயணரே! கொக்கின் தலையில். வெண்ணெயை வைத்துப் பிடிக்க முயற்சிப்பது போல் இருக்கிறது தங்கள் யோசனை. நான் விசாரிக்கவேண்டிய அவசியமே இல்லை. நான் சொன்னபடி இன்றிரவுக்குள் புகழேந்தியையும். விகடகவியையும் சிறையிடவேண்டும். இது என் கட்டளை புலவரே? வாருங்கள்; அரண்மனைக்குப் போகலாம்.

(அரசனும் கூத்தரும் செல்கின்றனர்.)

[திரை]