பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்சி–12.

இடம்–உறையூரில் ஒரு வீதி

காலம்–பகல்

(பொதுமக்கள் கூடிப் பேசிக்கொண்டிருக்கின்றனர்.)

முதல் ஆள்:- என்னா அக்ரமம் பாத்திங்களா அண்ணே! ஒட்டக் கூத்தருடைய கொட்டம் எப்பத்தான் அடங்குமோ தெரியலையே!

2வது ஆள்:- ஏம்பா என்ன விஷயம்?

முதல் ஆள்:- விஷயம் ஒனக்குத் தெரியாதா? பாண்டிய நாட்டிலேருந்து நம் மகாராணிசுட வந்திருந்தாருல்லே புகழேந்திப் புலவரய்யா! அவரையும் புடிச்சி சிறையிலே போட்டுட்டாராம் கூத்தர்!

2வது ஆள்:- உம்......! நெசமாவா! அடாடாடா, அவரு ரொம்ப நல்லவருல்லே! இந்த சமாச்சாரம் மகா ராணிக்குத் தெரிஞ்சா!......

முதல் ஆள்:- உம் தெரியாமேதானே இருக்குமோ, மகா ராஜாவே கூத்தர் சொல்றபடியெல்லாம். ஆடும்போது, மகாராணி என்ன செய்யமுடியும்?

2வது ஆள்:- ஐயோ பாவம். இவரையும் வழக்கப்படி இந்த வருஷம் தேவி பூசையிலே பலி கொடுத்துடுவானே இந்தப் பாவி.

முதல் ஆள்:- ஊஹும், அதுமட்டும் நடக்கா தண்ணே. நடக்காது.

2வது ஆள்:- ஏன் நடக்காது?