பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைவாணன்

65

முதல் ஆள்:- புகழேந்திப் புலவரும் படிப்புலே ரொம்பக் கெட்டிக்காரராம். அதுனாலே, கூத்தர் என்னாக் கேளுவியக் கேட்டாலும் சொல்லிப் புடுவாருன்னு எல்லாருமே பேசிக்கிறாங்க.

2வது ஆள்:- என்னமோப்பா. இந்தக் கூத்தர் செய்யறது எனக்குப் புடிக்கவே இல்லே.

2வது ஆள்:- ஒனக்கு மட்டுமா புடிக்கலே. ஊருலே எல்லாருக்குந்தா புடிக்கல்லே. மகாராஜாவே அவருக்கு ஒடந்தையா இருக்கும்போது யாருதான் என்ன செய்யுறது.

முதன் ஆள்:- ஆமாம்பா, இது அரமனை விஷயம். நாம் இதைப்பற்றி பேசறதே யாராவது கேட்டா நம்ம உசிருக்கே ஆவத்தா முடியும். பெரிய எடத்துப் பொல்லாப்பெல்லாம் நமக்கு எதுக்கு உம். வா வா; பொளைக்கிற வழியைப் பாப்போம்.

(போகிறார்கள்.)

[திரை.]

க–5