பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்சி–13.

இடம்–சிறைச்சாலை.

காலம்–பகல்

(புகழேந்தி, விகடகவி, மற்றும் புலவர்கள்.)

விகடகவி:- பழைய நட்பை எண்ணிப், பார்த்து விட்டுப் போகலாமென்று வந்ததற்கு நல்ல வெகுமதி கிடைத்ததையா.

புகழேந்தி:- வெகுமதிக்கென்ன குறை? கவிகளுக்கு வேண்டியதென்ன? ஒன்று நிம்மதியான தனி இடம். இரண்டு, வயிற்றுக்குச் சிறிது உணவு. இவ்வளவுதானே இரண்டும் நமக்குக் கிடைத்திருக்கிறது. பொழுதெல்லாம் ஓய்விருக்கிறது, அதோ பாரும்! அகண்ட வானத்திடை நிகழும் வருணபேத விசித்திரங்களையும், கதிரவனின் ஜொலிப்பையும், பறவைகளின் இனிய ஓசையையும், நதியின் எழிலையும், மகளிர் கூட்டம் தோகை மயில் களின் கூட்டத்தைப் போல் ஒய்யாரமாய் நடந்து சென்று தண்ணீரெடுத்துப் போகும் காட்சியையும் கண்டு களித்து எத்தனையோ கவிதைகளையும், காவியங்களையும் எழுதலாமே! சிறைச்சாலையைக் கண்டு நடுங்க நாமென்ன கோழைகளா?

விகடகவி:- சரி. சரி. இதுவும் இன்பமா? நல்ல இன்பமையா இது கல்லையும் மண்ணையும் காற்றையும் ஊற்றையும் பாடிப் பொழுதைக் கழிக்க, உங்களைப் போல் எனக்கவ்வளவு பொறுமையில்லை. எண்ணி இன்னும் இருபது நாளைக்குள் இந்த இருட்டறையில் இந்தக் கூழைக் குடித்துக் கொண்டிருந்தால் நிச்சயம் யமலோக யாத்திரைதான். சரிதான். சரிதான். தெரியாமலா