பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைவாணன்

67

உம்மைப் பொம்மை மாதிரி சீதனப் பொருள்களுடன் சேர்த்துக் கொடுத்தார் பாண்டிய மன்னர்?

புகழேந்தி:- கொடுத்ததிலென்ன? இப்போதும் குலோத்துங்க மன்னன் என்னைப் பொம்மைப் போலத்தான் நடத்துகிறார்.

விகடகவி:- இல்லை; கூத்தர் என்ற குரங்கின் கையில் சிக்கிய பூமாலையாகி விட்டீர்கள்.

புகழேந்தி:- அது என் தவறல்லவே!

விகடகவி:- தவறு யாருடையதாகவேனும் இருக்கட்டும். அதன் பலனாக விளைந்த தண்டனையில் எனக்கும் பங்கு கிடைத்ததை நினைக்க நினைக்கத் தான் என் வயிறு எரிகிறது. அட கடவுளே...! வீட்டை விட்டு, ஊரை விட்டு, மனைவி மக்களை விட்டு இதற்குத்தானா நான் இங்கே வந்து சேர்ந்தேன்? இதுவும் என் தலை யெழுத்தா!

(மற்ற புலவர்கள் வருகிறார்கள்.)

வேளாளன்:- ஐயா! உங்களுக்கு மட்டுமா தலையெழுத்து எல்லோருக்குமேதான். நல்ல புலமையையும் பைசாசக் குணத்தையும் படைத்த இந்தக் கூத்தன், நம்மைப்போல் இன்னும் எத்தனை புலவர்களை இந்தத் துர்க்கைக்குப் பலியிடப் போகிறானோ! யார் கண்டார்கள்?

விகடகவி:- என்ன!......பலியா? துர்க்கைக்கா...... ! புலவர்கள் எல்லோரையுமா?...... ஐயையோ!...

தட்டான்:- நாங்களும் அதை நினைந்துதான் வருந்திக்

கொண்டிருந்தோம்.