பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

கலைவாணன்

புகழேந்தி:- அப்படியானால் நீங்கள் யாவரும் புலவர்கள் தானா?

குயவன்:- இல்லை. ஏதோ கொஞ்சம் படித்திருக்கின்றோம். வறுமையின் கொடுமை நீங்க ஏதேனும் சிறிது பொருள் பெறலாமென்று வந்த எங்களை இப்படிச் சிறையிட்டனர் குலோத்துங்கனும், கூத்தரும்.

புகழேந்தி:- பரிசில் பெற வந்த உங்களைச் சிறையிடக் காரணம்?

தச்சன்:- அதுதான் இந்தக் கூத்தரின் வழக்கமாம். புலவரென்று வருபவரையெல்லாம் சிறையிட்டு வதைத்து முடிவில் விஜயதசமியன்று துர்க்கையின் சந்நிதியில், தன் கேள்விக்குத் தக்க விடையளிக்காத புலவர்களையெல்லாம், இருவர் இருவர் தலைகளை ஒன்றாய்ப் பிணைத்துப் பலியிட்டு விடுவாராம்.

விகடகவி:- ஐயையோ...! கேட்கும்போதே பயமாய் இருக்கிறதே! எனக்கும் இக்கதிதானா! நான் ஏன் இந்தச் சங்கடத்தில் மாட்டிக் கொண்டேன்? உம்...ஐயா! புலவர் மணியே! உமக்குக் கோடி நமஸ்காரம். எனக்கு இந்த வேதனைகளையெல்லாம் பொறுக்க முடியாது. எப்படியாவது நான் மட்டும் தப்புவிக்க வழி செய்யும் அடுத்த நாளே உம்மைத் தப்புவிக்கிறன்.

புகழேந்தி:- உம்மை நான் தப்புவிப்ப திருக்கட்டும். உம்மால் என்னை எப்படித் தப்புவிக்க முடியும்?

விகடகவி:- நேரே பாண்டிய மன்னரிடம் போய் புகழேந்தியைக் கூத்தர் சிறையிட்டிருக்கிறார் என்று ஒரு வார்த்தை சொன்னால்...!

எல்லோரும்:- ஹா! தாங்கள் யார்? புகழேந்திப் புலவரா!

(எல்லோரும் ஆச்சரியப்படுகின்றனர்).