பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

கலைவாணன்

விகடகவி:- என்ன செய்வீர்களோ! எனக்குத் தெரியாது எனக்கு வேண்டியது திருப்தியான சாப்பாடுதான்.

புகழேந்தி:- (சற்று யோசித்து) சரி, நான் ஒரு யோசனை சொல்லுகிறேன். அதன்படி செய்வீரா?

விகடகவி:- செய்தால் சாப்பாடு கிடைக்குமல்லவா?

புகழேந்தி:- ஆஹா உமக்கு மட்டுமல்ல; எல்லோருக்குமே கிடைக்கும்.

விகடகவி:- உம்!...உண்மையாகவா! அதென்ன யோசனை?

புகழேந்தி:- அதோ பார்த்தீரா?

விகடகவி:- (எட்டிப் பார்த்விட்டு) எதை தண்ணீ ரெடுக்கப் போகும் பெண்களையா?

புகழேந்தி:- ஆம்; காலையிலும், மாலையிலும் நகரப் பெண்கள் அனைவரும் தண்ணீர் எடுக்க ஆற்றுக்கு இந்த வழியாகத்தான் போகிறார்கள். ஆகையால் அவர்கள் விரும்பிக் கேட்கும் முறையில் எளிய நடையில் ஈரடிப் பாக்களாக சில் கற்பனைக் கதைகளை ஒழிந்த நேரங்களில் சொல்லுகிறேன். அவைகளை ஓலைச் சுவடியில் எழுதிக்கொண்டு, அவர்கள் இந்த வழியில் போகும் பொழுதெல்லாம் பாடினால் உமது இனிய இசையில் மயங்கி உமக்கு வேண்டிய உணவுப்பொருள்களெல்லாம் கொண்டுவந்து கொடுப்பார்கள் ........?

விகடகவி:- ஆஹாஹாஹா! அருமையான யோசனை. இனி எனக்குக் கவலையே இல்லை! இனிமேல் இந்தச் சிறையே எனக்குச் சொர்க்கம். இதோ ஓலையும் எழுத்தாணியும் தயார் எங்கே! ஏதாவது ஒரு கதை சொல்லுங்கள்.

புகழேந்தி:- சொல்லுகிறேன். எழுதுங்கள்.

[திரை]