பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

கலைவாணன்

கமலம்:- அடியம்மா! கோமளம். நீ ரொம்ப பெரிய மனுஷி. அதிகமா பேசுவே. நான் ஒன்னெ ஒன்னுங் கேக்கல்லே! சும்மா இரு.

அலமேலு: பாத்தியாடி! மாமியாரைப்பத்திச் சொன்னவுடனே அவளுக்கு கோவத்தை.

சாவித்திரி:- பின்னெ என்னாடி? அவளுக்கு எதுக்கவே அவமாமியாரைக் கேலி பண்ணினா அவளுக்குக் கோபம் வராமெ இருக்குமா?

கமலம்:- அதுக்கில்லேடி! என்னமோ கதை கேட்டோன்னிங்களே! என்ன கதை? எப்படி இருந்ததுன்னு கேட்டா......! விஷயத்தைச் சொல்லாமல், மாமியாள் கோவிச்சிக்கிடுவாள் ; மருமகள் கோவிச்சிக்கிடுவான்னா!......

அலமேலு:- ஓகோ! அதைக் கேக்கிறியா? சொல்றேன் கேளு. நம்ம மகாராணிகூட பாண்டிய தேசத்திலேருந்து ஒரு புலவர் வந்திருந்தாரில்லே, அவரு இப்போ சிறையிலே இருக்கிறாரு. அவரு சிறையிலேயே என்னன்னமோ கதையெல்லாம் எழுதுறாராம். அதையெல்லாம் அவரு கூட சிறையிலே இருக்கிற இன்னொரு புலவர் ராகத்தோட படிச்சிச் சொல்லுகிறாரு பாரு! ஆகா! இன்னைக்கெல்லாங் கேக்கலாம் போலிருக்கு.

கமலம்:- உம்; அப்படியா! அடெடே! சொல்லியிருந்தா நானுங்கூட வந்திருப்பேனேடீ!...இப்ப என்ன கதை நடக்குது?

அலமேலு:- பத்து நாளா, அல்லி அரசாணி மாலைன்னு ஒரு கதை நடந்தது. நாளையிலிருந்து புலந்திரன் களவு மாலைன்னு ஒரு புதுக்கதை தொடங்கப்போறாங்களாம். நாளைக்கு வாரியா?