பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைவாணன்

75

கமலம்:- ஓ! கண்டிப்பா வர்ரேன்; நீங்கமட்டும் போறபோது மறந்துடாமே என்னையும் ஒரு சத்தம் கூப்பிடுங்கோ.

சாவித்திரி:- சும்மா வரக்கூடாதடியம்மா. சும்மா வரக் கூடாது. வரும்போது தின்பண்டம், பழம், அரிசி ஏதாவது கொண்டு போகணும். ஏன்னா அவங்க சிறையிலே இருக்கிறவங்க தானே. அங்கே ஒழக்குக் கூழைத் தவிர என்ன கிடைக்கும்?

கமலம்:- ஏதாவது கையிலே கெடைச்சதே கொண்டு போனாப் போவுது.

சாவித்திரி:- சரி; நாழியாகிவிட்டது. வாங்கடி போகலாம்.

(போகிறார்கள்.)

[திரை]