6
உச்ச நிலை
(கருப்பம்)
┌───────────────┴─────────────┐
சிக்கல்வீழ்ச்சி
(பிரதிமுகம்)(விளைவு)
││
தொடக்கம்முடிவு
(முகம்)(துய்த்தல்)
குலோத்துங்கன், பாண்டியன் மகளை மணப்பது கதைத் தொடக்கமாகவும், புகழேந்தியை ஒட்டக் கூத்தர் சிறையிலிடச் செய்வது சிக்கலாகவும், குலோத்துங்கனின் மனைவி கதவைத் தாழிடுவதன் வாயிலாகப் புகழேந்தியைச் சிறை விடுதலை செய்வது உச்சமாகவும், இதன் பின்னர்ப் புகழேந்தியின் பெருமை ஓங்குவது விளைவாகவும், இறுதியில் இரு புலவர்களும் ஒருவர்க்கொருவர் வேறுபாடற்று இணைந்து, சமநிலையில் நிற்பது முடிவாகவும் அமைந்து, நாடகம் சிறக்கிறது. நாடக இலக்கணத்திற்கேற்ப ஐந்து நிலைகளையும் பொருத்தமுற அமைத்து ஆசிரியர் வெற்றி கண்டுள்ளார்.
சுவைகள்
உள்ளத்து நிகழ்ச்சியைப் பிறர்க்குப் புலப்படுத்துவது இயற்றமிழின் தன்மை; மொழிப் பொருளோடு இசையுஞ் சேர்ந்து நிற்க மனக் குறிப்பினை வெளிப்படுத்துவது இசைத் தமிழின் தன்மை; மொழிப்பொருள், இசை என்னும் இரண்டினோடு அவிநயமும், சத்துவமும் சேர வைத்து உள்ளத்தெழுந்த மனக் குறிப்பினைப் பிறர்க்குப் புலப்படுத்துவது “நாடகத் தமிழின் தன்மை” எனக் குறிப்பிடுகிறார் விபுலானந்த அடிகள். நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை எனும் எண் சுவையோடு சம நிலையையும் கூட்டிச் சுவை ஒன்பது என்பர் அறிஞர். இந்நாடகத்தில், புகழேந்தியின் உரைகள் பெருமிதச் சுவைக்கும், கூத்தரின் செயல்கள் இளிவரல் சுவைக்கும், குலோத்துங்கன்—குணவதி திருமணம் உவகைச் சுவைக்கும், ஒட்டக்கூத்தரால் தம் தலை வெட்டப்படுமோ எனப் புலவர்கள் நடுங்குவது அச்சச் சுவைக்கும், அரசி தாளிடுவது வெகுளிச் சுவைக்கும், கதவு தாளிடப்பட்டது கண்டு மன்னன்