பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

கலைவாணன்

*8 கலைவாணன்

பாட்டு

“மானவன் நானந்த வாளரிவேங்கையும்; வற்றிச்செத்த கானவன்! நானவ் வெளியுந்தழலுங் கனைகடலின் மீனவன்! நானந்த வெங்கட்சுறவமும், வீசுபணி தான்வன்! நானந்தக் கதிரோனுதயமுங் தார்மன்னனே' (சிறையிலுள்ள மற்ற புலவர்களும் நகர்வலக் கூட்டத் தினரும் கைகொட்டி நகைக்கின்றனர். கூத்தர் ஆத்திரப் படுகிறார்.)

கூத்தர்: அரசே! பார்த்தீர்களா! அவன் செருக்கை. இன்னும்

அவன் ஆணவம் குறைந்தபாடில்லையே?

குலோத்:- ஆமாம்; அணையப்போகும் தீபம் சுடர் விட்டெரிவது இயல்புதான்ே! துள்ளிய மாடு நிச்சயம் பொதி சுமக்கும்.

உதயணர்:- தாங்கள் பாடிய பாடலுக்குத்தான்ே அவர் பதில்

சொன்னார். இதில் தவறொன்று மில்லையே! கூத்தர்:- பதில் சொன்னது சரிதான்். ஆனால் அந்தப் பதிலால் என் கோபத்தையும் கிளறித் தன் முடிவையும் நிச்சயித்துக் கொண்டான்! உதயணர்: பிறர் முடிவை நிச்சயிக்கும் சக்தி நம் சக்திக்கு

அப்பாற்பட்டதல்லவா? - குலோத்:- ஆம். உதயணர் சொல்லுவதும் உண்மை தான்். கூத்தர்:- சாதாரண மனிதரைப் பொறுத்தவரை உதயணர் சொல்வது உண்மைதான்். ஆனால் நான் இந்நாட்டின் மன்னரின் அன்பிற்கும் ஆதரவிற்கும் உரிய அரசவைப் புலவன். மன்னர் என் விருப்பத்தை என்றும் புறக்கணித்த தில்லை. இனியும் புறக்கணிக்கமாட்டார் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஆகையால் இது ஒரு பெரிய காரியமா! எனக்கு.

(வெகுண்டு செல்லுகின்றனர்) (திரை.)