பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



இடம்:- குணவதியின் அந்தப்புரம், காலம்:-பகல்

(குணவதி குமுதவல்லியுடன் வருகிறாள்.)

குணவதி:- குமுதம்! எங்கே இன்னும் உதயணரைக் காண வில்லை. ஒருக்கால் அவர் வராமலே இருந்து விட்டால் பிறகு...-?

குமுதம்:- இல்லை. அவசியம் இன்று பதினேழு நாழிகைக்குள் வந்து விடுகிறேன். நீ முன்னால் போய் மகாராணியிடம் சொல்லு' என்று சொன்னார்.

குணவதி:- பொழுது சாய்ந்து விட்டதே! இப்போது பதினெட்டு நாழிகைக்கு மேல் இருக்கும் போலிருக் கிறதே! விழா ஆர்ப்பாட்டத்தில் உன்னிடம் சொன்னதை மறந்து வராமல் இருந்து விட்டால்? பிறகு புலவரின் கதி ஐயோ! குமுதா, அதை நினைக்கும்போதே என் உடல் பதறுகிறதே!

குமுதம்:- உதயணர் சொன்ன சொல் தவறமாட்டார். எப்படியும் இன்னும் சற்று நேரத்திற்குள் வந்து விடுவார் ஆனால் அவர் இங்கு வருவது வேறுயாருக்கும் தெரியக் கூடாது. அதற்காகவே அவர் தக்க சமயத்தை எதிர் பார்த்துக் கொண்டிருப்பாரென்று நினைக்கிறேன்.

குணவதி:- இது கோழைத்தனம். காரியம் மிஞ்சும் பொழுது உயிர் என்ன வெல்லமா? வருவது வரட்டுமே. புலவரின் உயிரைவிட நம் உயிர் என்ன அவ்வளவு உயர்வு?

குமுதம்: நீங்கள் ஏன் இப்படி அதைரியப்படுகிறீர்கள்? நான் எவ்வளவோ அவருடன் வாதாடி அவர் உள்ளத்தைக்