பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

கலைவாணன்


கிளறிப் பார்த்தேன். தாங்கள் சந்தேகப்படுவதைப் போல் ஒன்றும் புலவருக்கு நேர்ந்துவிடாதென்று உறுதியாகச் சொல்லுகிறார். அதோ பாருங்கள். அவரே வந்துவிட்டார்! (உதயணர் வேகமாக வருகிறார். குணவதி ஓர் திரைக்குப் பின்னே மறைவாக நின்று கொள்ளுகிறாள்.) குமுதம்: நல்ல வேளையாக வந்தீர்கள். நீங்கள் வராமல் இருந்துவிடுவீர்களோ வென்று மகாராணி துடியாய்த் துடித்தார்கள். உதயனர்:. ஆம்; வருவது கஷ்டமாகத்தான்் போய்விட்டது. இப்போதும் அதிக நேரம் தாமதிக்க முடியாது. மகாராணியார் எங்கே? குணிவதி:- என்ன! உதயணரே மகாராணியைக் காண இன்று வந்ததைவிட புகழேந்திப் புலவரின் தலையைத் துர்க்காதேவிக்குப் பலியிட்ட பின் மன்னருடன் மகிழ்ச்சி யாக நாளை வந்தால் மகாராணியின் உயிரற்ற உடலை யும் கண்டு மகிழ்ந்திருக்கலாமே! ஏன்? அதற்குள் விஷய மெல்லாம் அந்தப்புரத்திற்குத் தெரிந்துவிட்டதே என்று யோசிக்கிறீர்களா? உதயணன்:- (காதைப் பொத்தி) சிவசிவா! மகாராணி மன்னிக்க வேண்டும். என் தவறு எதுவுமில்லை. கூத்தரின் குழ்ச்சி வலையில் வீழ்ந்து மீள முடியாது தவிக்கின்றார் மன்னர். ஒரு சமயம் புகழேந்திப் புலவரைச் சிறையிட்டதே தவறென்று நினைக்கிறார். ஆனால் கூத்தரைக் கண்ட மறுகணமே அவர் மனோ நிலையும் மாறி விடுகிறது. மன்னரின் செய்கையைத் தடுக்க யாராலாகும். அவர்குணம் தாங்கள் அறியாததா? குணவதி:- உதயணரே! வெகுநன்றாயிருக்கிறது உமதுபேச்சு, கூத்தரின் சூழ்ச்சி வலையிற்பட்டு அரசர் ஆடுகிறார்.