பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

81


அரசரின் ஆட்டத்துக்கு நீங்கள் தாளம் போடுகிறீர்கள். உம்...அப்படித்தான்ே! பசுங்கன்றைத் தேர்க்காலிற் கொன்ற குற்றத்திற்காகத் தனது பாலகன் என்பதையும் மதியாது கொன்று மனுநீதி கண்ட சோழன் என்ற மாசிலாப் புகழ்படைத்த சோழ பரம்பரையில் வந்த உங்கள் மன்னரின் ஆட்சியில் இன்று அநீதி தாண்டவ மாடுகிறது. அறிஞர்களையும், கவிஞர்களையும் போற்றிப் புகழ்ந்து அவர்கள் கற்பனையில் கண்டு உருவகப்படுத்தியளிக்கும் அழியாக் கலைப் பண்புகள் நிறைந்த காவியங்களையும், கவிதைகளையும் கண்டு களித்து அவைகளின் மேன்மைகளை எண்ணி எண்ணிப் பூரித்துப் பிறருக்கும் எடுத்துக்காட்டி மகிழ்ச்சியடைய வேண்டிய சுபதினமாகிய விஜயதசமித் திருவிழாவன்று, கவிஞர்களையும் புலவர்களையும் தேவியின் பெயரால் பலியிட்டு அழியாப் பெரும் பழியைத் தேடிக்கொள்ளும் உங்கள் மன்னவரின் போக்கு வெகு நன்றாயிருக்கிறது.

உதயணரே! அரசர் தவறு செய்தால் அதை எடுத்துக் காட்டித் திருத்தவேண்டியது அமைச்சரின் கடமையல்லவா?

ஏன் மெளனம் சாதிக்கிறீர்? வெளியுலகம் தெரியாது அந்தப்புரத்தில் அடைபட்டிருக்கும் ஒரு பெண், நமது அரசரையும், ஆஸ்தான்ப் புலவரையும், நம்மையும் இப்படி அவமதித்துப் பேசுகிறாளே! என்று யோசிக் கிறீரா? நான் பெண்தான்். என்றாலும் கோழையல்ல. குற்றவாளி யென்று கொலை செய்விக்கப்பெற்ற கோவலன் நிரபராதி என்ற உண்மை தெரிந்த அக்கணமேதன் உயிரைப் போக்கிக்கொண்ட பாண்டியன் நெடுஞ்செழியனும், கணவன் இறந்த உடன் தன் க-6