பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

85


காரியம் மிஞ்சுவதற்குள் உமது கடமையை நிறை வேற்றும். இன்னும் சற்று நேரம் நீர் வராதிருந்திருந் தால் துர்க்கையின் ஆலயத்திற்கு நானே நேரில் மாறு வேடத்துடன் வர இருந்தேன். ஆனால்... ..?

உதயணர்: தேவி வேண்டாம் வேண்டாம். தாங்கள் நினைப்

பதைப் போல் புலவருக்கு ஒன்றும் நேர்ந்து விடாது. இன்றிரவுக்குள் நான் தங்களுக்கு நல்ல சேதியைக் குமுதத்திடம் சொல்லி அனுப்புகிறேன். தங்கள் கட்டளையையும் அரசரிடம் தெரிவிக்கிறேன். நான்

போய்வருகிறேன்.

(வணங்கிச் செல்லுகிறார்.)

(திரை)