பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-17

இடம்:- சிறைச்சாலை காலம்-மாலை. (புகழேந்தி மற்றப் புலவர்களுடன் உரையாடிக் கொண் டிருக்கிறார்.) விகடகவி. எனக்கு அப்பொழுதே தெரியும். தெரிந்தும் தெரியாத்தனமாய்வந்து இந்தச் சங்கடத்தில் மாட்டிக் கொண்டேன். அடகடவுளே! உனக்குக் கண் இல்லையா? இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்தக் கூத்தனின் ஆட்கள் வந்து இழுத்துக் கொண்டுபோய் ஆட்டுக்கடாவை வெட்டி எறிவதைப்போல் வெட்டிஎறிந்துவிடுவார்களே. கடைசியில் எனக்கு இந்தக் கதியா வரவேண்டும்.

புகழேந்தி:- நண்பரே நீர் மகா கோழை. இவர் களெல்லோரையும் பார்த்தீர்களா! எவ்வளவு தைரியமா யிருக்கிறார்கள்.

தட்டான்:- இன்று காலை பட்ட அவமானம் போதாதா கூத்தருக்கு. இனிமேலும், அவர் தங்களுடன் கலை விவாதத்திற்கு வரப் பயித்தியமா என்ன?

குயவன்:- ஆம். இனி தங்கள் பெயரைக் கேட்டாலும் நடுங்குவார். மேலும் அரசர்கூடத் தங்களுக்காக அதிகம் பரிந்து பேசினாரே!......

விகடகவி: அரசன் புகழேந்திப் புலவருக்காகத்தான்ே பரிந்து

பேசினார். நம் கதி?

புகழேந்தி:- விகடகவியாரே! அப்படி ஒன்றும் நேர்ந்து விடாது. பயப்படாதீர். உங்கள் எல்லோரையும் விட