பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

85


என் உயிர்மட்டும் உயர்ந்ததா என்ன? ஒருபோதுமில்லை. மாண்டால் யாவரும் மாள்வோம். மீண்டால் யாவரும் மீள்வோம். போதுமா? கருமான்:- வேண்டாம்; வேண்டாம். நாங்கள் யாவரும் மடிந்தாலும் கவலையில்லை. எப்படியும் நீங்கள் இன்னும் நெடுங்காலம் தமிழைவளர்க்க வேண்டும். இது தான்் எங்கள் ஆசை. - புகழேந்தி:- நான் சொன்னபடி சிறிதும் அதைரியமின்றி ஒவ்வொருவரும் கூத்தர் கேட்கும் கேள்விகளுக்குத் தயக்கமின்றி விடையளித்தால், நாம் அனைவருமே மீட்சியடைவோம். கண்ணான்:- புலவர் பெரும; தங்களைக் கண்ட் அன்றே கோழைத்தனமும் பயமும் எங்களைவிட்டு நீங்கிவிட்டது. இனி கூத்தரின் கேள்விக்கோ அல்லது கொலைஞர்கள் கூர்வாளுக்கோ அஞ்சோம். இது சத்தியம். - புகழேந்தி:- அப்படியாயின் வெற்றி நிச்சயம். என்ன

விகடகவியாரே! உமது முடிவு என்ன?

(பயத்தில் திக்கித்திணறியபடி) விகடகவி;- அதே முடிவுதான்்! நான் மட்டும் கோழையா

என்ன?

புகழேந்தி:- சபாஷ்! விகடகவியாரே! அப்படிச் சொல்லும்... உம். நான் சொன்னதெல்லாம் எல்லோருக்கும் ஞாபகம் இருக்கிறதல்லவா?

எல்லோரும்:- ஆம். ஞாபகமிருக்கிறது.

புகழேந்தி:- கூத்தரின் சேள்விக்கு உங்கள் பதில் எப்படி

இருக்கவேண்டும்?

விகடகவி- கூத்தரை வெட்கித் தலைகுனியச் செய்யக்

கூடியதாயிருக்க வேண்டும்?