பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-18

இடம்:- துர்கையின் ஆலயம். காலம்:- மாலை

(குலோத்துங்கன், கூத்தர், உதயணர், புலவர்கள், பூசாரி, கொலையாளிகள், ஏவலாளர்கள் மற்றும் பிர பலஸ்தர்கள் பிரசன்னமாயிருக்கின்றனர்.)

கூத்தர்: மற்ற ஆண்டுகளைவிட இவ்வாண்டு துர்க்கையின் பூஜை மனத்திற்கு அதிக மகிழ்ச்சின்ய அளிக்கும்.

அல்லவா?

குலோத்து:- காரணம்?

கூத்தர்:- பலியிடப்போகும் புலவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய நூற்றுக்கு மேலிருக்கும். விழாவின் சிறப்புக்கு இதைவிட வேறென்ன வேண்டும்? குலோத்து:- (மெளனமாக இருக்கிறான்)

(காவலர் இருவர் வந்து வணங்குகின்றனர்.) கூத்தர்:- எங்கே சிறையிலுள்ள புலவர்களை யெல்லாம்

அழைத்து வந்து விட்டீர்களா? எங்கே அவர்கள்? காவலன்:- எல்லோரும் தக்க பாதுகாப்புடன் வெளியே

நிற்கின்றனர்.

கூத்தர்:- அவர்கள் எல்லோரையும் சீக்கிரம் இங்கு கொண்டு

வந்து வரிசையாய் நிறுத்துங்கள். (காவலர் வணங்கிச் சென்று எல்லோரையும் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்)