பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

கலைவாணன்


கூத்தர்:- (துர்க்கா தேவியை நோக்கிக் கைகூப்பியவாறு) 'ஆடுங்கடைமணி நாவசையாம லகிலமெல்லாம் நீடுங்குறையிற்றரித்தபிரான் என்றும்......

குலே: (இடைமறித்து)

நித்வம் பாடும்புலவர் பணிகொண்ட கூத்தன் பதாம்புயத்தைச் சூடுங்குலோத்துங்க சோழனென்றே எனைச் செப்புவரே. (என்று பாட்டைப் பூர்த்தி செய்து கூத்தருக்கு வணக்கஞ் செய்கிறான்.)

கூத்தர்:

(செருக்குடன் எதிரே நிற்கும் புலவர்களையெல்லாம் நோக்கிவிட்டுப் பின், முதலில்நிற்கும் குயவனைக் கேள்வி கேட்கத் தொடங்குகிறார்.)

கூத்தர்:- (குயவனை நோக்கி)

மோனை முத்தமிழ் மும்மதமும் பொழி யானை முன்வந் தெதிர்த்த வன்யாரடா?”

குயவன்:

"கூனையுங் குடமுங் குண்டு சட்டியும் பானையும்பண்ணு மங்குசப்பயல் நானடா (அரசன் வியப்படைகிறான். புலவர்கள் நகைக்கின்றனர். கூத்தரும் திகைக்கிறார்)

கூத்தர்:- உ.ம்...இவன் ஒரு அகம்பாவி! இருக்கட்டும்? நீ

இப்படிப் போய் நில். (அடுத்தவனை நோக்கி) 'விண்பட்ட கொக்குவல்லுறுகண்டென்ன விலவிலக்கப் புண்பட்ட நெஞ்சொடு மிங்கு கின்றாய்ப் பொட்டையா!

புகல்வாய்"