பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

89


எங்கே இதற்குப் பதில் சொல்வாய். உன் கவித் திறத்தையும் பார்ப்போம்! அம்பட்டன்:

"கண் பொட்டையாயினும் அம்பட்டன் கான் கவிவாணர்

முன்னே.

பண்பட்ட செந்தமிழ் நீயுங் திடுக்கிடப் பாடுவனே'

(மறுபடியும் புலவர்கள் நகைக்கின்றனர். அரசன்

கூத்தரைப் பார்த்து திகைக்கிறார்)

கூத்தர்: வாயாடி, கண்ணற்ற குருடனுக்குத் திமிரைப் பார்! யாரங்கே? இவனையும் அப்படி இழுத்து நிறுத்து. (காவலன் அவனையும் இழுத்து நிறுத்துகிறான்.)

கூத்தர்:. (மூன்றாவது நின்றவனை நோக்கி) உம். என்ன!

நீயும் புலவன்தான்ோ?

கொல்லன்:

'செல்வன் புதல்வன் திருவேங்கடவன் செகத்குருவாம் கொல்லன் கவியைக் குறைசொன்ன பேரைக் குறடு

கொண்டு

பல்லைப் பிடுங்கிப் பருந்தாட்டமாடிப் பகைவர் முன்னே அல்லும் பகலும் அடிப்பேன் கவியிருப்பாணி கொண்டே' (மறுபடியும் யாவரும் சிரிக்கின்றனர்.)

கூத்தர்:- (சினத்துடன்) சே! மடையன், யாரென்று கேட்டால் ஜாதித் தொழிலைக் காட்டுகிறான். போ இப்படி.

(கொல்லனை இழுத்துத் தள்ளச் செய்கிறார்.) கூத்தர்:- (வண்ணானை நோக்கி) நீ பார்?.

வண்ணான்:- (மேலும் கேள்வி கேட்கவிடாமல் விரைந்து

பதிலளிக்கிறான்.)