பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

91


'கோக்கண்டு மன்னர் குறைகடற்புக்கிலர் கோகனகப் பூக்கண்டு கொட்டியும்.பூவாதொழிந்தில பூதலமேழ் காக்கின்ற மன்ன கவியொட்டக் கூத்தகின் கட்டுரையாம் பாக்கண்டொளிப்பரோ தமிழ்பாடிய பாவலரே!” கூத்தரே! உம் கூற்று விநோதத்திலும் விநோதம் நிறைந்தது. தமிழறிந்த புலவர்களை யெல்லாம் அழிக்கும் நீர்தான்் தமிழை வளர்க்கும் புலவரோ! நீர் புலவர்களையா அழிக்கிறீர்? இல்லை; தமிழையே அழிக்கிறீர். கசடறக் கற்றவனே புலவனென்னும் பெயர் வகிக்கத் தகுந்தவன் என்பது உமது வாதமென்றால் கணக்கற்ற பிழைகள் நிறைந்த பாடல்களால் ஏட்டை நிரப்பும் நீர் மட்டும் புலவரென்று சொல்லிக்கொள்ள என்ன உரிமை இருக்கிறது?

கூத்தர்:- ஆ! என்ன சொன்னாய்? என் பாட்டில் குற்றம்

கண்டாயா! நாவைத் துண்டித்து விடுவேன். ஜாக்கிரதை!

வேளாளன்:- கூத்தரே! வீண் மிரட்டல் வேண்டாம்.

தலையையே துண்டிக்கத் தயாராய்க் காத்திருக்கும் உமது கொலைஞர்களைக் கண்டும் அஞ்சாத நாங்கள் நாவைத் துண்டிப்பதற்காகப் பயந்து விடமாட்டோம். நெற்றிக் கண்களைக் காட்டிலும் குற்றம் குற்றமே என்று கூறிய நக்கீரன் போன்ற வீரப்புலவர்கள் என்றும் தமிழ் நாட்டில் இருப்பார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்.

கூத்தர்:- தற்புகழ்ச்சி வேண்டாம். என் பாட்டில் கண்ட

குற்றத்தை எடுத்துரையும். இல்லையேல் இறப்பதற்குச் சித்தமாகுக.

வேளாளன்:- அரசே! பேசுந் தெய்வங்களாகிய புலவர்களே!

அவையினர்களே! எல்லோரும் கேளுங்கள். முன்பொரு சமயம் இவர் விக்ரமசோழ மகாராஜாவின் மேற்பாடிய அண்டத்துப் பரணி என்னும் நூலில்,