பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைவாணன்

93


என்று அண்டத்திலுள்ள பெரும்புறக்கடலையல்லவா அகழென்று அழகாகச் சொல்லியிருக்கிறார். இதை நீர் கேட்டதுகூட இல்லையா?...உ.ம். இப்பேர்ப்பட்ட நீர்தான்ா எங்களைத் தண்டிக்கப் போகிறீர்? வெட்கம்; வெட்கம். இது எங்கும் காணாத நீதி.

விகடகவி:- நீதியா! அப்படியும் ஒன்றா இங்கே இருக்கிறது? இதோ நிற்கிறாரே சாட்சாத் நீதியின் பிரதிபிம்பம்.

(கூத்தரைக் காட்டி இப்படிச் சொல்ல புலவர்கள் சிரிக்கின்றனர்.)

குலோத்:- சட்! வாயாடிகளே! நாவைத் துண்டித்து

விடுவேன்.

கூத்தர்:- அரசே! எய்தவனிருக்க அம்பை நோவதில் பயனென்ன? இவர்களைக் கடிந்துகொள்வதில் பயனொன்றுமில்லை. இவ்வளவும் நம்மை அவமானம் செய்யும் நோக்கத்துடன் சிறையிலேயே புகழேந்தி செய்த சூழ்ச்சியே ஆகும். ஆகையால் இவர்கள் இழைத்த குற்றத்தின் தண்டனை யனைத்தையும் புகழேந்தியே அடையவேண்டும்.

குயவன்:- இல்லை; இல்லை. நீர் கேட்ட கேள்விகளுக்கு நாங்கள் பதில் அளித்தது குற்றமானால், அதற்கு நாங்களே பொறுப்பாளிகள். புகழேந்திப் புலவர் எங்களனைவருக்கும் ஆசிரியராகையால் எங்களுக்கு விடுதலை யென்றால் அவரும் விடுதலையடைய வேண்டும், இல்லையேல் எங்களையும் தண்டிக்க வேண்டும்.

கூத்தர்:- பார்த்தீர்களா இத்தனையும் அவன் செய்த சூழ்ச்சியே என்பது இப்பொழுதாவது தெரிகிறதா?