பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

கலைவாணன்


குலோத்:- ஆம், இத்தனைக்கும் காரணம் புகழேந்திப் புலவர்

தான்். ஆனால்...இவர்களை யெல்லாம்......

கூத்தர்- இவர்களையெல்லாம் விடுதலை செய்துவிட்டு!

புகழேந்தியை மட்டும் கைவாளுக்கு!......?

உதயணர் :- அரசே! இது கொஞ்சமும் நீதியற்ற செயலாகும். யாருக்கும் எத்தகைய தீங்கும் செய்தறியாத புகழேந்தியைக் கொன்றால் அப்பழி இவ்வுலகுள்ளவரை

அகலாது. -

குலோத்:- ஆமாம்! உதயணரே! அதைப்பற்றி பிறகு சாவகாசமாக யோசிக்கலாம். இப்போது எல்லோரையும் விடுதலை செய்துவிட்டு புகழேந்திப் புலவரை மட்டும் சிறையிலேயே வையுங்கள்-உம் காலதாமதமாகி

விட்டது. பூசை நடைபெறட்டும்.

(துர்க்கைக்குப் பூஜை நடைபெறுகிறது.)

- (திரை.)