பக்கம்:கலைவாணன் (நாடகம்).pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-19.

இடம்:-குணவதியின் அந்தப்புரம். காலம்:- மாலை.

(குணவதியும் உதயணரும் உரையாடுகின்றனர்.)

குணவதி:- உதயணரே! இவையெல்லாம் வீண் சமா

தான்ங்கள்; நான் யாருக்குச் சலுகை காட்டவேண்டு மென்று வற்புறுத்தினேனோ அவரைச் சிறையிலேயே வருந்த விட்டு மற்றவர்களை யெல்லாம் விடுதலை செய்வதென்றால் இதிலிருந்தே அரசரின் போக்கு விளங்க வில்லையா?

உதயணர்:- தேவி! கூத்தரின் கொடுமைக்கு அரசரைக் -

குறைகூறிப் பயனில்லை. அரசர் குறுக்கிடா திருந்தால் கூத்தர் இன்று நமது புலவரைக் கொன்றே தீர்த்திருப் பார். - -

குணவதி:- உதயணரே! உமது பேச்சு வெகு விசித் திரமாயிருக்கிறது. மீண்டும் புலவரைச் சிறையிட்ட சோழ மண்டலாதிபதியின் கருணையை உம்மைத் தவிர வேறு யார்தான்் புகழமுடியும்?

உதயணர்:- சந்தர்ப்பம் அப்படியாகி விட்டது. என்மீது எவ்விதத் தவறும் இல்லை. தங்கள் கட்டளையை நான் நிறைவேற்றி விட்டேன். குணவதி:- நீங்கள் நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் அதற்குப் பலன்தான்் இல்லை. குருவுக்கேற்ற அரசர்; அரசருக்கேற்ற அமைச்சர். (தோழி ஒருத்தி வந்து குணவதியை வணங்குகிறாள்.) கு ணவதி: என்ன விஷயம்: -